சிவகாசி: திமுக ஆட்சியில் எந்த திட்டமும் வரவில்லை எஸ்.பி. வேலுமணி

66பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. இராஜேந்திரபாலாஜி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி பேசியபோது: - எந்த திட்டமும் கொண்டு வராத ஆட்சி திமுக ஆட்சி தான் என்று குற்றம் சாட்டினார். திமுக ஆட்சி போக வேண்டும், மீண்டும் எடப்பாடியார் ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார். மேலும் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர, ஒன்றிய நிர்வாகிகளும், அதிமுக சார்ந்த பல்வேறு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி