விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனைக்குட்டம் நீர்த்தேக்க அணையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சிவகாசி தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தண்ணீரில் மிதந்த சடலத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டெடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திருத்தங்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது லூதர் என்பது தெரியவந்துள்ளது. அவரது உயிரிப்பிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.