விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரி துரைச்சாமிபுரத்தில் ஜல்லிக் கற்கள் உடைத்து விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனீஸ் உராங்க் (20) என்பவர் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று கல்குவாரியில் இருந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்று மூச்சுத் திணறி ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று குவாரியில் இருந்து அனீஸ் உராங்க் உடலை மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.