விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகரின் முக்கிய நீர் ஆதாரமான பெரியகுளம் கண்மாய்க்கு ஆஸ்திரேலியா, நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த செங்கால்நாரை என்ற வெளிநாட்டுப் பறவைகள் வலசை வரத் தொடங்கியுள்ளன. இவை ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வெம்பக்கோட்டை அருகே சங்கரபாண்டியாபுரம் கிராமத்திற்கு வருவது வழக்கம். தற்போது கண்மாயில் தண்ணீர் குறைவாக இருப்பதால், இப்பறவைகள் இறை தேடி இங்கு வந்துள்ளன. வெளிநாட்டுப் பறவைகளின் வருகையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.