சிவகாசி அருகே பட்டாசு குடோனுக்குள் புகுந்த விஷ பாம்பு. தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி- சாத்தூர் சாலையில் உள்ள ரத்தினபுரி நகரில் தனியார் பட்டாசு குடோன் உள்ளது. இந்த பட்டாசு குடோனில் பாம்பு புகுந்ததால் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பதட்டம் அடைந்தனர்.
இதையடுத்து சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற தீயணைப்பு படையினர் குடோனுக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள விஷ பாம்பை லாபகமாக மீட்டு காட்டுப் பகுதிகளுக்குள் விடப்பட்டது.