விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற கருநெல்லி நாதர் சுவாமி மீனாட்சி அம்பிகை கோவிலில் ஐயப்பசி மாத பிரதோஷ விழா நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி நந்தி பகவானுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அன்னம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை தரிசனம் செய்தனர்.