சிவகாசி: சிசிடிவியில் சிக்கிய பைக் திருடன்

1666பார்த்தது
சிவகாசி அருகே தேவர்குளம் குருகாலனியை சேர்ந்த மகேஸ்குமார் (41), தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். வழக்கம்போல் கடன் வசூலிக்க நண்பருடன் சென்றபோது, 2 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தை கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, பணத்துடன் இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மகேஸ்குமார் அளித்த புகாரின்பேரில், சிவகாசி நகர் காவல் துறையினர் மணிகண்டபிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி