சிவகாசி: ரயில்வே மேம்பால பணி ஆய்வு..

873பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கலில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலப் பணிக்கான சாத்தியக்கூறுகளை அசோகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சாட்சியாபுரம் மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் திருத்தங்கலில் மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. சுமார் 69 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலப் பணிக்கு நில கையகப்படுத்த சுமார் ரூ. 32 கோடியும், மேம்பாலம் அமைக்க சுமார் ரூ. 45 கோடியும் செலவிடப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி