சிவகாசி முத்துலாஷா தைக்கா தர்ஹா வளாகத்தில் அதிமுக சிறுபான்மை பிரிவு நடத்திய இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். சிறுபான்மை மக்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், இஸ்லாமியர்களின் குரலாகவும், பாதுகாவலனாகவும், தூணாகவும், கேப்டனாகவும், கேடயமாகவும் தான் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகம் சார்பில் ராஜேந்திரபாலாஜிக்கு சால்வை அணிவித்து குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது.