சிவகாசி: செவிலியர் கிரேஸியை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை..

3பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஜூலில்-அஷ்மா காத்துன் தம்பதி, தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், 5வது முறையாக கர்ப்பமான அஷ்மா காத்துன், நிறைமாத கர்ப்பிணியாக வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார். பெண் குழந்தை பிறந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கிராம சுகாதார செவிலியர் கிரேஸ், வீட்டில் நடந்த பிரசவத்தை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது போல் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து, செவிலியர் கிரேஸை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். கணவர், ஏற்கனவே நான்கு குழந்தைகளையும் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :