விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சாலையில் நின்று சண்டையிடுவது போல் நடித்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கும் இளைஞர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கலைக் கல்லூரி அருகே இரு இளைஞர்கள் சாலையின் நடுவே நின்று சண்டையிடுவது போல் நடித்து, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்க வைத்து கேலி செய்துள்ளனர். இந்த வீடியோவை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். ரீல்ஸ் மோகத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.