சிவகாசி: வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்...

1பார்த்தது
சிவகாசி அருகே ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலகத்தில், திமுக தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் கூடலிங்கம் மற்றும் அவரது மகன் வெயிலுமுத்து ஆகியோர் சான்றிதழ் கோரி தகராறில் ஈடுபட்டு கிராம உதவியாளரை தாக்கி, அவரது செல்போனை பறித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக திருத்தங்கல் போலீசார் வெயிலுமுத்துவை கைது செய்து, கூடலிங்கனை தேடி வருகின்றனர். இதனிடையே, கூடலிங்கனை கைது செய்யவும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவும் வலியுறுத்தி சிவகாசி வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியை புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி