திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (30) இன்று காலை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றார். அப்போது, விருதுநகர் மெயின் ரோட்டிலுள்ள குறுக்கு பாதை அருகே சுற்றுலாப் பேருந்து ஒன்று திரும்பி வந்தபோது, எதிரே வந்த பால்பாண்டியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பால்பாண்டி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போலீஸார், உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.