சிவகாசி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக சிவசந்திரன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவர் மீது எம்.புதுப்பட்டி போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடையனேரி கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மற்றும் எரிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் ஆகியோரிடம் தலா ரூ. 5.50 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 8.50 லட்சம் பெற்ற நிலையில், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.