விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக கடைகள் மற்றும் குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேம்பாலப் பணிகள் துவங்க உள்ள நிலையில், கடைகளை இடிக்காமல் சேவை சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். மேலும், 100க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வணிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.