விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலுள்ள சிறுகுளம் கண்மாயில் அரிய வகை நீர்வாழ் உயிரினமான நட்சத்திர ஆமை மீட்கப்பட்டுள்ளது. பாரசக்தி காலனி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கண்மாய் பகுதியில் பிரண்டை செடி எடுக்கச் சென்றபோது, அங்கிருந்து சாலைக்கு ஊர்ந்து வந்த நட்சத்திர ஆமையைக் கண்டெடுத்துள்ளார். பின்னர், இது ஒரு பாதுகாக்கப்பட்ட கடல்சார் உயிரினம் என்பதால், வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.