சிவகாசி: தமிழக முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்...

79பார்த்தது
சிவகாசி: தமிழக முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்...
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா சிவகாசி மாநகர் முழுவதிலும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகாசி மாநகரம் 45, 46, வட்ட கழகம் சார்பில் இன்று தமிழக முதல்வர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

 திமுக பகுதி கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர் ஞானசேகரன் கலந்து கொண்டு கட்சிகொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாநகராட்சி ஏவிடி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் சேவுகன், பகுதி கழக செயலாளர்கள் காளிராஜன், விளையாட்டு மேம்பாட்டுஅணி துணை அமைப்பாளர் மைக்கேல், விக்னேஷ் பிரபாகரன் மற்றும் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்ட கழக செயலாளர்கள் பரமசிவம், சேகர் பாண்டி செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி