சிவகாசி: தவெக நிர்வாகி அருண்குமார் ஒரு லூசுபய; Exஅமைச்சர் KTR

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிகவின் கொள்கைக்கு எதிராக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், அக்கட்சியினர் இந்த கூட்டணியை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா திமுகவை எதிர்த்து தான் இந்த இயக்கத்தை உருவாக்கியதாகவும், அதிமுக அரசையும் கட்சியையும் எதிர்த்து பேசுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என்றும் கூறினார். ஜெயலலிதா தனக்கு பின்னரும் அதிமுக 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று சூளுரைத்ததை அவர் நினைவு கூர்ந்தார். விஜய் கட்சி பரிதாப நிலையில் இருப்பதாகவும், களத்தில் அதிமுக, திமுக மட்டுமே இருப்பதாகவும், அருண்குமார் ஒரு லூசு பய என்றும், மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது என்று சொல்வது லூசுத்தனமானது என்றும் அவர் விமர்சித்தார். ஒரு நாள் கூத்துக்கு தவெக தாங்காது என்றும், களத்தில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே போட்டி இருக்கும் என்றும் அவர் கூறினார். விருதுநகர் எம்பி தொகுதியில் தனியாக நின்று 27 ஆயிரம் ஓட்டு வாங்கிய மாணிக்கதாகூர் எல்லாம் அதிமுக பதில் சொல்லாது என்றும், காங்கிரஸ் கட்சியினர் வேடிக்கை பொருட்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி