விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பெங்களூரிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சித்துராஜபுரத்தைச் சேர்ந்த ராஜா (36) மற்றும் முனியசாமி (25) ஆகிய இருவரை கைது செய்து, சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். பெங்களூரிலிருந்து மொத்தமாக புகையிலை வாங்கி சிவகாசி பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.