சிவகாசி பேருந்து நிலையத்தில், சிவகாசியிலிருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் பின்பக்க எல்.இ.டி. பெயர் பலகையில் 'தமிழக வெற்றி கழகம்' என ஆங்கில எழுத்துக்கள் சுழன்றதால் பயணிகள் குழப்பமடைந்தனர். ஒரு பயணி இதை வீடியோ எடுத்தார். இதைக் கண்ட பேருந்து ஓட்டுநர் உடனடியாக எழுத்துக்களை மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.