சிவகாசி அருகே பள்ளப்பட்டியில் பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையம். பொது சொத்துகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி முத்துராமலிங்கபுரம் காலனியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்தப் பகுதியில் குற்றசெயல்கள் குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக புறக்காவல் நிலையம் முழுமையாக செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது.
இந்த புறக்காவல் நிலையத்துக்கு உரிய போலீசார் பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. புறக்காவல் நிலையம் பூட்டிக்கிடப்பதால் இந்த பகுதியில் சமூக விரோத செயல்கள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. போதை ஆசாமிகள் புறக்காவல் நிலையம் அருகில் அமர்ந்து கொண்டு அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி செய்வதும், அந்த பகுதியில் பள்ளபட்டி ஊராட்சி சார்பாக போடப்பட்டுள்ள குடிநீ்ர் குழாய்கள் சேதபடுத்தும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக புகார் கொடுக்க அந்த பகுதி மகக்ள் தயக்கம் காட்டுவதால் சமூக விரோத செயல்கள் மீண்டும் அதிகரித்துள்ளது. உடனடியாக திறக்க வேண்டும் என்றும் பள்ளபட்டி, முத்துராமலிங்கபுரம், விவேகானந்தர் காலனி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.