சிவகாசி: மனைவி தற்கொலை; கணவர் அதிர்ச்சி

1541பார்த்தது
சிவகாசி: மனைவி தற்கொலை; கணவர் அதிர்ச்சி
சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள முத்தமிழ்புரம் காலனியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் (43) தனியார் நிறுவன ஊழியர். கடந்த 25-ந்தேதி இரவு, அவரது மனைவி லதா மகேஸ்வரி (39) மற்றும் மகன் லோகேஸ் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென விழித்த சுந்தரமகாலிங்கம், மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், மறுநாள் மாலையில் வீடு திரும்பிய லதா மகேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி