சிவகாசி: தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

1427பார்த்தது
சிவகாசி: தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த லோடுமேன் மாரியப்பன் (43), குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். கடம்பன்குளம் கண்மாய் பகுதிக்குச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.