சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் காளிராஜன் (56). தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளிராஜனை கைது செய்தனா்.இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் காளிராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா்.