ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி தனியார் மது பாரில் இலவசமாக மது கேட்டதில் ஏற்பட்ட தகராறில், நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் பார் ஊழியர் மாயன் காயமடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூமாபட்டி போலீஸார், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரமணி, ராஜா ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டுகள் இவர்களுக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து விசாரணை நடத்தியதில், கூமாபட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(28), மம்சாபுரத்தை சேர்ந்த சந்தனகுமார்(28) ஆகியோரையும் கைது செய்தனர். வீரய்யா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.