பாஜக சக்தி கேந்திரம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

175பார்த்தது
அருப்புக்கோட்டை மதுரை சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே பாஜக சக்தி கேந்திரம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 28 இடங்களில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது 28வது மற்றும் கடைசி பிரச்சார கூட்டமாகும். பாஜக நகர் பொது செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாஜக கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல், பாஜக மாவட்ட பொது செயலாளர் சீத்தாராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி