விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள திருத்தங்கல் சாலையில் அமைந்திருந்த காய்ச்சல்காரம்மன் கோயிலில் கடந்த மாதம் 23-ஆம் தேதி இரவு ₹9,500 திருடு போனது. இது தொடர்பாக சிவகாசி கிழக்குப் போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பள்ளபட்டி தேவராஜ் குடியிருப்பைச் சேர்ந்த குமார் (22) மற்றும் ஜெயசுதன் (20) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீட்கப்பட்டது.