சிவகாசி அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை..

3பார்த்தது
சிவகாசி அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை..
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பள்ளபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த குட்டிராஜா (25) என்ற தொழிலாளி, குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார். கேரளாவில் வேலை பார்த்து வந்த இவர், தீபாவளிக்கு ஊருக்கு வந்து மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. மது அருந்தும் பழக்கத்தால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், குட்டிராஜா வீட்டின் அருகே உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி