சாத்தூரில் விவசாயி கொலை.. மகன், பேரனுக்கு ஆயுள் தண்டனை

808பார்த்தது
சாத்தூரில் விவசாயி கொலை.. மகன், பேரனுக்கு ஆயுள் தண்டனை
சாத்தூரில் சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன் காளைசாமி மற்றும் பேரன் மணிகண்டன் ஆகியோருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. விவசாயி சண்முகவேல் (70) தனது மகன் காளைசாமி (43) மற்றும் பேரன் மணிகண்டன் (19) ஆகியோரால் சொத்து கேட்டு ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி