விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், செங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் நீதிபதியை நோக்கி அரிவாளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அவரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுற்றுச்சுவர் அருகே நாற்காலியைப் போட்டு ஏறி குதித்து நீதிமன்றத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நீதிமன்ற சுற்றுச்சுவர் பகுதியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.