விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நவம்பர் 17 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில், சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுவதால் 'சித்தர்களின் சொர்க்க பூமி' என அழைக்கப்படுகிறது. நினைத்த காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். வனத்துறையின் அறிவிப்பின்படி, காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் இரவில் மலையில் தங்க அனுமதிக்கப்படவில்லை.