ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு தெருவில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில், கடந்த மே 19 அன்று, 70 வயது முதியவருக்கு பணம் எடுக்க உதவியது போல், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதியவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ. 3,75,000 திருடிச் சென்றார். இது குறித்து முதியவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சிவகாசியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரே இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.