தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டம்.

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி