விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான வன்னியம்பட்டி, மல்லி மம்சாபுரம், கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக நிலவிய வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.