ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஒளவைசந்திரன் (25), பொன்செல்வியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 8 மாத கர்ப்பிணியான பொன்செல்விக்கு, ஒளவைசந்திரனின் மது அருந்தும் பழக்கத்தை கைவிடுமாறு உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு, நள்ளிரவில் ஒளவைசந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.