சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை

829பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, சிறுமியை காதலிப்பதாக கூறி கரூருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் வழக்கில், கரூரை சேர்ந்த செல்வம் (27) என்பவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி புஷ்பராணி இந்த தீர்ப்பை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி