பொங்கல் பரிசுத் தொகையைக் கேட்டு தாயைத் தாக்கிய மகன் கைது...

5பார்த்தது
பொங்கல் பரிசுத் தொகையைக் கேட்டு தாயைத் தாக்கிய மகன் கைது...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொங்கல் பரிசுத் தொகையைக் கேட்டு தாயைத் தாக்கிய மகனை போலீஸார் கைது செய்தனர். வத்திராயிருப்பு கீழத்தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி மனைவி கஸ்தூரி, மகன் சத்தியபிரகாஷ் (23) மதுப்பழக்கத்தால் வீட்டில் பிரச்சனை செய்து வந்துள்ளார். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்ட ரூ. 3 ஆயிரம் பணத்தை தனக்கு தருமாறு கேட்டு தாயை அரிவாளால் தாக்கியுள்ளார். இதுகுறித்து வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து சத்தியபிரகாசைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி