விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஶ்ரீஆண்டாள் கோவிலில் நவம்பர் 10 ஆம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவ விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில் ஶ்ரீஆண்டாள் மற்றும் ஶ்ரீரெங்கமன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.