விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது. குளிர்காலம் தொடங்க உள்ளதை முன்னிட்டு பெருமாள் மற்றும் ஆழ்வார்களுக்கு 108 போர்வைகள் சாற்றப்பட்டு, கைசிக புராணம் வாசிக்கப்பட்டது. ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியாழ்வார் உட்பட 12 ஆழ்வார்கள் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 108 போர்வைகள் சாற்றப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.