ஸ்ரீவி: பெளர்ணமி பூஜைக்கு குவிந்த பக்தர்கள் கூட்டம்

65பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம். 

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என மாதம் 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் 11 முதல் இன்று 14-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மாசி மாத பௌர்ணமி வழிபாடு நடைபெறுகிறது. 

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெரிய அளவில் மலை பெய்யாததாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படாததாலும் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை இல்லை என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து இன்று மார்ச் 14 மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சதுரகிரி மலை அடிவாரத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.

தொடர்புடைய செய்தி