ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், குடும்ப நல நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பிப்ரவரி 16 அன்று வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை வீசியுள்ளார். வழக்கறிஞர் அமரும் இடத்தில் அரிவாள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த டி.எஸ்.பி. பாலசுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையிலான போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான பிரச்சனை காரணமாக ஜீவனாம்சம் வழக்கு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 16 அன்று தீர்ப்பு வரவிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர், குடும்ப நல நீதிமன்றத்திற்கும் பொறுப்பு நீதிபதியாக உள்ளார்.