ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருத்தேரோட்டத்திற்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில், பங்குனி உத்திரம், மார்கழி நீராட்டு உற்சவம், திருவாடிப்பூர தேரோட்டம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத்தின் பூர்வாங்க பணியான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.