ஸ்ரீவி: வாக்காளர் தீவிரத் திருத்தப்பணிகளைஆய்வு செய்த ஆட்சியர்

1பார்த்தது
ஸ்ரீவி: வாக்காளர் தீவிரத் திருத்தப்பணிகளைஆய்வு செய்த ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில், 1.1.2026 தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனர். திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 30,765 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆட்சியர், அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.