ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி கிராமத்தில், தனியார் மதுபானக் கடை வளாகத்தில் மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். பின், காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தும் அவுட்டுக்காய்களை மதுபானக் கடையின் சுவரில் வீசிவிட்டுச் சென்றனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரமணி (44), ராஜா (45) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள வீரைய்யாவை தேடி வருகின்றனா்.