விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நவ. 2 அன்று தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில், சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நீரோடையில் குளிக்கவோ அல்லது இரவில் மலையில் தங்கவோ அனுமதி இல்லை என்றும் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.