ஶ்ரீவி: அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நவம்பர் 19 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில், சித்தர்களின் பூமி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். வனத்துறையினர் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி