ஸ்ரீவி: மாசி மாத பெளணர்மி; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்...

2பார்த்தது
ஸ்ரீவி: மாசி மாத பெளணர்மி; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இருப்பினும், வனத்துறையினர் பக்தர்களுக்கு இரவு நேரத்தில் மலையில் தங்க அனுமதி இல்லை என்றும், மலை நீரோடையில் குளிக்க அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளனர். இதனால், பக்தர்கள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.