ஸ்ரீவி: சாரல் மழை;சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை...

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு, ஜனவரி 11 அன்று மழை காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவித்திருந்த நிலையில், சதுரகிரி மலைப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை இந்த தடையை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி