விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், டிட்வா புயல் திசை மாறி தென்பக்கமாக திரும்பியதால் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நவம்பர் 1 அன்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. வன்னியம்பட்டி, மல்லி, மம்சாபுரம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.