ஶ்ரீவி: நள்ளிரவு கொட்டி தீர்த்த கன மழை;மக்கள் மகிழ்ச்சி....

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் பலத்த கனமழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட 5 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்து, விருதுநகர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் கொடுத்திருந்த நிலையில், வத்திராயிருப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், நள்ளிரவில் பெய்த சாதாரண சாரல் மழை, இறுதியில் கனமழையாக மாறியது. இதனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புழுக்கத்தில் தவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி